நீச்சல் போட்டியில் சாதனை படைத்த பெண்கள்!!

வடமராட்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நீச்சல் போட்டியொன்றில் 40 வயதான பெண்ணொருவர் வெற்றிவாகை சூடியுள்ளார்.

வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது.

பருத்தித்துறை- தென்னியம்மன்முனையில் இருந்து இன்பசிட்டி வரை குறித்த நீச்சல் போட்டியானது இடம்பெற்றிருந்தது.

இப்போட்டியில் முதலாம் , இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே 40 , 44, 56 வயதான பெண்கள் பெற்றிருந்தனர்.

இவ்விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான நீச்சல் மற்றும் படகோட்டப் போட்டிகள் இடம்பெற்றிருந்தபோதிலும் வயதான பெண்களுக்கிடையே இடம்பெற்ற நீச்சல் போட்டியானது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

Related Posts