நிஸா பிஸ்வால் – ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

maith-nesha

நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் கடந்த தேர்தலை நியாயமானதும் மற்றும் சுதந்திரமானதுமான முறையில் நடத்தியமை குறித்து நிஸா பிஸ்வால் தனது பாராட்டுக்களை இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எதிர்வரும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டினுள் சமாதானம் மற்றும் சகவாழ்வை கட்டியெழுப்பத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

நேற்றையதினம் இலங்கைக்கு விஜயம் செய்த நிஸா பிஸ்வால் நேற்று காலை வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts