நிவாரண விலையில் அத்தியாவசிய பொருட்கள்

நிவாரண விலையின் கீழ் 15 வகையான அத்தியாவசிய பொருட்களை நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த பொருட்களுள் சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்த்தூள், டின் மீன் , பயறு, கௌபி, நெத்தலி, கடலை, கொத்தமல்லி, பாம் எண்ணெய், சோயா, மாசி மற்றும் கருவாடு ஆகிய பொருட்கள் அடங்குவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை அறிவித்தார்.

Related Posts