நிவாரணம் பெறுவதற்கு சிரமதானம் செய்யுமாறு பணிப்பு!

கிளிநொச்சியின் சில பிரதேசங்களில் அரசினால் வழங்கப்படும் வறட்சி நிவாரணத்தினைப் பெறுவதற்கு சிரமதானம் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமது அன்றாடக் கடமைகளை விடுத்து மேற்படி சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதிலும் வறட்சிக்கான நிவாரணங்கள் அரசாங்கத்தினால் விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.

இன்று இரண்டாவது நாளாக குறித்த நிவாரணத்திற்கான வேலை செய்துள்ளதாகவும், அடுத்த வரும் நாட்களிலும் இவ்வாறு செய்தாலே நிவாரணம் தமக்கு கிடைக்கும் என மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts