நிவாரணப் பொருட்களுடன் கப்பல்களை அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவற்காக நிவாரணப்பொருட்கள் , வைத்திய குழு மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் இரு கப்பல்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு உதவி வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டதுக்கிணங்க உடனடியாக இந்திய அரசாங்கம் நிவாரண பொருட்களை அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதில் முதலாவது கப்பல் இன்று(சனிக்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் . மற்றைய கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளது.

Related Posts