நிலையான வைப்பக்கள் மற்றும் கடன் வட்டி அலகுகள் குறைப்பு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை

வங்கி வட்டி வீதங்களைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தும் கொள்கை வட்டி வீதத்தை தொடர்ந்தும் வீழ்ச்சியுறச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பிரகாரம் மத்திய வங்கியுடன் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களின்போது தாக்கம் செலுத்தும் நிலையான வைப்புகள் மற்றும் கடன் வட்டி அலகுகள் 50 வீதமாகக் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான தனது நிதிக்கொள்கையை பிரகடனப் படுத்தியுள்ள இலங்கை மத்திய வங்கி, பணவீக்கம் குறைந்துள்ள போதிலும், அதற்கேற்றவாறு சந்தை வட்டிவீதம் நிலையான மட்டத்தை எட்டவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. 0.1 வீதமாக தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பண வீக்கம், இந்த வருடம் முழுவதும் 5 வீதத்திற்கு மேற்படாத மட்டத்தில் காணப்படும் எனவும் மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.

இந்த சூழ்நிலையின் கீழ், பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கும் தனியார் துறையின் கடன் அளவை அதிகரிப்பதற்காக வட்டி வீதத்தை தொடர்ச்சியாக குறைப்பதே மத்திய வங்கியின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த சில மாதங்களாக தனியார்துறை கடன்கள் குறிப்பிடத்தக்களவால் அதிகரித்துள்ளதுடன், பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் அந்த கடன் தொகை 12.6 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதனை மேலும் அதிகரிக்கும் நோக்கில் மத்திய வங்கியுடனான கொடுக்கல் வாங்கல்களின்போது தாக்கம் செலுத்தும் நிலையான வைப்பு வசதிகளுக்காக 6 வீதம் வரையும், நீண்டகால கடன்களுக் காக 7.5 வீதம் வரையும் வட்டியை மத்திய வங்கி குறைக்க உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts