நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 300 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள“Mandous” என்ற சூறாவளியானது இன்று காலை 8.30 மணிக்கு வட அகலாங்கு 9.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 83.80 E இற்கும் அருகில் மையம் கொண்டிருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அது மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன் இன்று நள்ளிரவுப் பொழுதில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் வடதமிழ் நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் கூறப்பகிறது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts