நிலக்கண்ணி வெடிகள் அற்ற பிரதேசமாக முகமாலை

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினரால் அதிகமாக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட கிளிநொச்சி-முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பிரதேசம் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக நேற்று(12) பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முகமாலை பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கையை சர்வதேச கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்பு மற்றும் இராணுவத்தின் பொறியியல் அணியினால் முன்னெடுக்கப்பட்டது.

நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட 48 ஏக்கர் நிலப்பரப்பு பளை பிரதேச செயலாளர் பிரமோதயன் ஜெயராணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் செயற்பாடு கடந்த 8 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts