புதிதாக சுற்றோட்டத்துக்கு விடப்படவுள்ள 1 ரூபா நாணயக் குத்தியினதும் 5 ரூபா நாணயக் குத்தியினதும் உலோகங்களை துருப்பிடிக்காத உருக்கிற்கு (வெள்ளி நிறம்) மாற்றப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி 1 ரூபா மற்றும் 5 ரூபா நாணயக் குத்திகளின் பித்தளை முலாமிட்ட (தங்க நிறம்) மாற்றப்படவுள்ளது.
இதேவேளை 5 ரூபா நாணயக் குத்தியின் விளிம்பில் உள்ள எழுத்துக்கள் புதிய குத்தியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் பரிமாணம் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட மற்றைய அனைத்து விபரங்களும் 2005 லிருந்து சுற்றோட்டத்திற்கு விடப்பட்ட ரூபா 1.00 மற்றும் ரூபா 5.00 நாணயக்குத்திகளை ஒத்ததாகவே தொடர்ந்தும் இருக்கும் என்று இலங்கை மத்தியவங்கி மேலும் தெரிவித்துள்ளது.