நிறமூட்டப்பட்ட தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பருப்பு வகைகள் இரத்தினபுரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது தற்போது அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறுவதுடன் வேகவைக்க வழமையைவிட கூடுதலான நேரம் எடுக்கும்.
இவ்வாறான பருப்பு வகை விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறையிடுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.