இலங்கை அணியின் ஆரம்ப கட்ட துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் போட்டித் தடை விதிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய அணியுடன் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற 2 ஆவது ரி.20 போட்டியின் போது தன்னுடைய ஆட்டமிழப்பு தொடர்பில் அவர் செயற்பட்ட விதம் தொடர்பில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தென்னாபிரிக்காவுடன் அண்மையில் நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் ககிசோ ரபாடாவுடன் மைத்தானத்தில் ஏற்பட்ட மோதலும் இந்த தடை கொண்டுவருவதற்கு காரணமாகலாம் எனக் கூறப்படுகின்றது.
இந்த மோதல் சம்பவத்துக்காக ரபாடாவிடமும் திக்வெல்லவிடமும் போட்டியின் நிதியில் 50 வீதத்தை தண்டப் பணமாக செலுத்த வேண்டும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
நிரோஷன் திக்வெல்லவுக்கு எதிரான குற்றச்சாட்டு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த விசாரணையின் போது திக்வெல்லவுக்கு போட்டித் தடை விதிப்பதா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.