நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்

நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி – கெட்டம்பே பகுதியில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சுதேசவாத சிந்தைனையுடன், சமத்துவத்துடன் செயற்பட்டனர்.

பின் அதிகாரத்திற்காக பிரிந்தனர். அதிகாரத்திற்காக வேறுவேறு கட்சிகளை தோற்றுவித்தனர். இனவாத கட்சிகளை தோற்றுவித்தனர்.

நாம் பின்னோக்கி சென்றோம், யுத்தம் ஏற்பட்டது. 30 ஆண்டு காலம் வரை பாரிய துயரடைந்தோம்.

மிகவும் சிரமத்தின் பின் அனைவரும் இணைந்து, தீவிரவாதத்தை ஒழித்து நாட்டில் சமாதானத்தை தோற்றுவிக்க எமக்கு முடிந்தது.

மீண்டும் யுத்தம் ஏற்படாதிருக்க, நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர்கள் என்ற வசனம் தற்போது பயன்பாட்டில் எடுத்துக்கொள்ளப்படாது.

தொழிலாளர் என்பவர் நிபுணத்துவ பணியாளர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறினே சுட்டிக்காட்டினார்.

நிபுணத்துவ பணியாளர்களின் குரலுக்கு அரசியல் கட்சிகள் எந்தவொரு தருணத்திலும் செவிசாய்க்க வேண்டும்.

தொழில்துறை சார்ந்த பொதுமக்களின் குரலுக்கு ஏற்ற வகையில் அரசாங்கம் எந்தவொரு தருணத்திலும் பணியாற்ற வேண்டும்.

அந்த விடயத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

இந்த பலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சகோதர கட்சிகளின் பலமாக கருதவேண்டும்.

அத்துடன் இதற்கு நாட்டின் தொழில் வர்க்கத்தினரின் பலமும் சேர்ந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts