நிரந்தர அரசில் தீர்வைப்பெற கூட்டமைப்பை பலப்படுத்துங்கள்: சம்பந்தன்

நிலையான ஓர் அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமானால், தமிழ் மக்கள் அனைவரும், கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்முனையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியல் நிலைப்பாடு மற்றும் அரசியல் தீர்வை பொறுத்தவரையில் தமிழ் மக்கள் மிகவும் உறுதியாக உள்ளனர்.

ஒருமித்த நாட்டுக்குள் நாடு பிரிக்கப்படாமல், பிரிக்கப்படாத வகையில் சுயமரியாதையுடன், சம பிரஜைகளாக வாழ வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள அனைவரும் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

Related Posts