நியூஸிலாந்து 431 ஒட்டங்கள் குவிப்பு ! இலங்கை தடுமாற்றத்தில்

நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் 20க்கு இருபது போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.

New Zealand v Sri Lanka - 1st Test: Day 2

இதில் முதலாவது டெஸ்ட் போட்டி ​நேற்று டியூநிடினில் (Dunedin) ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, முதலாவது போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில், அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 431 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்தில் அதிரடியாக ஆடி, 156 ஒட்டங்களை விளாசினார்.

மேலும் கேன் வில்லியம்சன் 88 ஓட்டங்களையும் பிரன்டன் மெக்கலம் 75 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் நுவன் பிரதீப் 112 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

தனது முதலாவது இன்னிங்ஸில் சற்று முன்வரை 171 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறுகின்றது.

களத்தில் சந்திமால் 68 ஒட்டங்களுடனும் KDK விதனகே ஒட்டமேதும் பெறாமலும் களத்தில் உள்ளனர்.

Related Posts