நியூசிலாந்து 122 ஓட்டங்களால் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டுனெடினில் கடந்த 10ம் திகதி ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 431 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 294 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.

அடுத்தாக 137 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

அந்த அணி 3 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, 2-வது இன்னிங்சை இடைநிறுத்தி இலங்கையை துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி 405 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இலங்கை இன்றைய 5ம் நாள் ஆட்டத்தில் 282 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இதனால் நியூசிலாந்து 122 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடியுள்ளது.

Related Posts