சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முயன்ற 18பேர் சிறீலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நீர்கொழும்பில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 15 பேர் தமிழர்கள் எனவும், அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.