நியூசிலாந்துப் பிரதமருக்கு யானைக்குட்டி பரிசு: வன விலங்கு ஆர்வலர்கள் விமர்சனம்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீக்கு, அரசு ஒரு குட்டி யானையை பரிசாக அளிக்க முடிவு செய்திருப்பதை வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

elephant

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நடந்த ஒரு விழாவில் ஜோன் கீயிடம் இந்த யானைக்கான உரிமப் பத்திரத்தை வழங்கினார்.

இந்த நடவடிக்கையை விமர்சித்த வன விலங்கு ஆர்வலர்கள் ஐந்தே வயதான இந்த குட்டி யானையை அதன் குடும்பத்திடமிருந்து பிரிப்பது என்பது கொடுமையானது என்று கூறினர்.

நந்தி என்ற இந்த யானையை நியூசிலாந்தில் இருந்து வந்த விலங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இலங்கையில் பொதுவாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குப் பழகிய யானைகள் நியுசிலாந்து போன்ற சராசரி 15 டிகிரி வெப்பநிலை நிலவும் நாடுகளில் வாழத் தொடங்குவது அதிர்ச்சியாக இருக்கும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கூறுகிறார்கள் என, பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன.

Related Posts