நியூசிலாந்து நாட்டின் சவுத் ஒக்லாந்துப் பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று ஈழத் தமிழர்கள் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. இந்தச் விபத்துச் சம்பவத்தின்போது கைலேஸ், தனபாலசிங்கம் என்ற அகதிகள் நலனுக்கான சட்டவாளர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மனைவி (39 வயது), மகன் (5 வயது), மாமியார் (66 வயது) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
கைலேஸ் தனபாலசிங்கத்தின் மாமனாரும், மகள் (11) காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் வீட்டுக்குள் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து வெளியே ஓடி வந்த சிறுமி தகவல் வெளியிட்டதையடுத்து. அயலவர்கள், தீயணைப்பு படையினரை உதவிக்கு அழைத்தனர்.
தீயணைப்புப் படையினர் வந்து உயிரிழந்தவர்களின் சடலங்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டனர்.
கைலேஸ் தனபாலசிங்கம், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சிறீலங்காவில் இருந்து அகதியாக வந்து சவுத் ஓக்லாந்தில் குடியேறியிருந்தார்.