நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்

நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (20.09.2023) காலை அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நியூசிலாந்தின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே, 124 கிலோ மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தின் பல பகுதிகளில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

Related Posts