நியுஸிலாந்து அணியை “வைட் வொஷ்” செய்து வீழ்த்தியது இந்தியா

இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 321 ஓட்டங்களால் வெற்றிபெற்று நியுஸிலாந்து அணியை “வைட் வொஷ்” செய்தது.

253334

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 557 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, நியுஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 299 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் 258 முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 3 விக்கட்டினை இழந்து 216 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இந்திய அணி சார்பில் புஜாரா ஆட்டமிழக்காமல் 101 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் 475 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 153 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 7 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் அட்ட நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் அஸ்வின் தெரிவுசெய்யப்பட்டார்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 எனக் கைப்பற்றி இந்திய அணி நியுஸிலாந்து அணியை வைட் வொஷ் செய்தது.

Related Posts