பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் 51 பேர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என வவுனியா மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த முதலாம் திகதி 16 ஆயிரத்து 800 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
அதில் வவுனியா மாவட்டத்தில் 199 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது. அவர்களில் 197 பேர் நியமனக் கடிதங்களை பெற்றிருந்தனர்.
நியமனக் கடிதங்களை பெற்ற 197 பேரில் தற்போதுவரை 146 பேர் மட்டுமே கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் 57 பட்டதாரிகள் தமக்கான கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை என்றும் இவர்கள் ஏற்கனவே வேறு கடமைகளில் இருக்கலாம் என கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.