நிம்மதியற்று இருக்கிறோம்; காணாமற்போனோரின் உறவினர்கள்

காணாமற்போனோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (06) காலை 9 மணி முதல் நடைபெற்று வருகின்றது.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கைது செய்யப்பட்டு காணாமற்போனோர், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரின் ஒப்படைக்கப்பட்டு காணாமற்போனார் ஆகியோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது.

குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினர் காணாமற்போயுள்ளதால், அந்தக் கவலையில் தங்கள் குடும்பத்திலுள்ள மற்றைய உறுப்பினர்களுக்கும் நிம்மதியற்ற வாழ்வைத் தினம்தினம் கழித்து வருகின்றனர்.

முன்னைய அரசாங்கத்திடம் கடந்த 5 வருடங்களாக நாங்கள் முன்வைத்து வந்த கோரிக்கைக்கு தீர்வு இல்லை. எங்களுடைய கோரிக்கையை இந்த அரசாங்கம் கவனத்தில் எடுக்கவேண்டும் என உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

காலை 9 மணிக்கு முதல் மாலை 4 மணிவரையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts