காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு மேலும் இருவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளார்.
நிபுணர்களான அவ்தாஷ் கௌஷல், அஃமர் பீ சூபி ஆகிய இருவரே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு சட்ட மேதைகளான டேஸ்மன்டி சில்வா, சேர் ஜேப்ரி நைஸ், டேவிட் எம். கிரேன் ஆகிய மூவரும், கடந்த ஜுலை மாதம் 15ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்