தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ஆம் திகதி தொடங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து தொடங்கிய இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று மன்னார் சென்று அங்கிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம் கிளிநொச்சி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த ஊர்தியின் நான்காம் நாள் பயணம் நேற்று காலை இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சி சேவைச்சந்தையில் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டு அங்கு அதிகளவான மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அதனை தொடந்து குறித்த ஊர்தி சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டபோது அங்கு இராணுவத்தால் இடையூறு ஏற்படுத்தபட்டிருந்தது.
குறித்த ஊர்தி சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டபோது அங்கு வந்த இராணுவத்தினர் இடையூறு வழங்கியுள்ளனர்.
இராணுவ அதிகாரி ஊர்தி தொடர்பில் கேள்வி எழுப்பிய நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
இதனை தொடந்து ஊர்தி பவனி யாப்பாணத்தை வந்தடைந்துள்ளது இன்று (16) யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.