யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை படைத்தலைமையகத்துக்கு அழைத்த யாழ்.மாவட்ட படைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஆசிரியர் சங்கத்தினர், நாம் யுத்தத்தில் இறந்து போன மக்களுக்கே அஞ்சலி செலுத்தக் கோரினோம். அது எமது கடமை. தமிழ்ப் பாரம்பரியம். அதை அனுஷ்டிப்பதற்கு எமக்கு உரிமை இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த இராணுவத்தளபதி, உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இவ்வாறான நிகழ்வுகளை சிலர் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். தேவையற்ற தலையீடுகளும் ஏற்படுகின்றன.
எனவே அவற்றைத் தவிர்க்கும் வகையிலேயே இவ்வாறான நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்று கேட்கிறோம் என்றார்.
அவ்வாறு ஏதாவது நிகழ்ந்தால் இராணுவத்தினர் தலையிடுவதும் தவிர்க்க முடியாதது என்றும் இராணுவத்தளபதி தெரிவித்தார்