நிதி ஒப்பந்தங்களுக்கு ஆளுநர் திடீர்த் தடை

வடக்கு மாகாணசபை எந்தவொரு நிறுவனத்துடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் தமது அனுமதியுடனே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி அறிவுறுத்தியுள்ளார்.

alunar

வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற வடக்கு மாகாண சபையின் சகல செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

மாகாணசபைகள் சட்டத்தின் பிரகாரம் நிதி தொடர்பான சகல அதிகாரங்களும் தம்மிடமே இருக்கின்றன. அதனால் நிதியோடு தொடர்புடைய அனைத்து விடயங்களும் தமக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அத்துடன் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள்,தனியார் நிறுவனங்கள் என எவற்றுடனும் நிதி தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டாலும் அது குறித்து தம்மிடம் முறையான அனுமதி பெறவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் முழு ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட சகல ஒப்பந்தங்கள் தொடர்பிலான விபரங்களையும் ஆளுநர் கோரியுள்ளார்.

Related Posts