நிதிக் கம்பனிகளால் வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் திருத்தம்

Central_Bank_of_Sri_Lanka_logoநிதித்தொழில் சட்டத்தின் கீழ் மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்ட நிதிக்கம்பனிகளினால் ஏற்கப்படும் வைப்புக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வட்டி வீதங்கள் தொடர்பில் புதிய திருத்தத்தை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 2014 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஏற்கப்பட்ட அல்லது பேணப்பட்ட சேமிப்பு வைப்புக்களுக்கு செலுத்தக்கூடிய ஆகக்கூடிய ஆண்டு வட்டி வீதம் 7.58 சதவீதமும் ஏற்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட வைப்புகளுக்கு செலுத்தக்கூடிய ஆகக்கூடிய வட்டி வீதங்களாக ஒரு ஆண்டு கால அல்லது அதற்கு குறைவான முதிர்ச்சிக்கான ஆண்டு வட்டி வீதம் 11.01 சதவீதமதகவும் ஒரு ஆண்டுக்கு கூடிய மற்றும் மூன்று ஆண்டுகள் வரையான முதிர்ச்சிக்கான ஆண்டு வட்டி வீதம் 12.01 சதவீதமாகவும் மூன்று ஆண்டு காலத்திற்கு அதிகமான முதிர்ச்சிக்கான ஆண்டு வட்டி வீதம் 13.51 சத வீதமாகவும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அத்துடன் 55 வயதை கடந்த சிரேஷ்ட பிரஜையினால் வைக்கப்படும் சேமிப்பு அல்லது நிலையான வைப்பிற்கு மேற்குறிப்பிட்ட வட்டி வீதங்களுக்கு மேலதிகமாக ஒரு சத வீதத்தை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts