காணி உறுதி வழங்குவதாக தெரிவித்து இராணுவ வாகனங்களில் நேற்று ஏற்றி வரப்பட்ட நாவற்குழி தமிழ் மக்கள், இறுதியில் காணி உறுதி வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டதால் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் திட்டித் தீர்த்தனர்.
குருநகர் மாடித் தொகுதி புனரமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன் இறுதியில் நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபையின் காணியில் குடியேறியுள்ள சிங்கள தமிழ் மக்களுக்கு அதற்குரிய காணி உறுதிகள் வழங்கப்பட்டது.
அதற்காக நாவற்குழியில் தங்கியுள்ள 110 தமிழ்க் குடும்பங்கள் இராணுவத்தினரால் நேற்று அதிகாலையே குருநகருக்கு ஏற்றி வரப்பட்டனர். “யுத்த கமுதாவே 26260′ என்ற இராணுவத்தின் பேரூந்தில் ஏற்றிவரப்பட்ட மக்கள் மு.ப. 10 மணியிலிருந்து மதியம் 1 மணிவரையில் காத்திருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் நாவற் குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினருக்குச் சொந்தமான காணியில் குடியிருப்பவர்களுக்கு காணி உறுதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் நிகழ்வில் வைத்து 10 பேருக்கு மாத்திரமே வழங் கப்பட்டதுடன், ஏனையோருக்கு ஒரு மாதத்தின் பின்னர் வழங் கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் நிகழ்வுக்கு அழைத்து வரப்பட்டு காணி உறுதி கிடைக்காத மக்கள் அங்குள்ள அதிகாரிகளையும், அமைச்சர்களையும் திட்டித் தீர்த்தனர். அத்துடன் அதிகாரிகளுடனும் முரண்பட்டனர். காணி உறுதி ஒரு மாதத்தின் பின்னரே வழங்கப்படும் என்றால் எதற்காக தம்மை அழைத்து வந்ததாக அவர்கள் கேள்வியயழுப்பினர்.