யாழ்ப்பாணம் தமிழ் சங்கம் நடத்தும் நாவலர் விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்புரையை “நாவலரின் பன்முக ஆளுமை” என்ற தலைப்பில் உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் நிகழ்த்துவார்.
தொடர்ந்து நாவலர் ஆற்றிய பணிகள் குறித்த சிறப்பு பட்டிமன்றமும், கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.