நாவலர் விருதுக்கான குறும்படப் போட்டி 2016

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் – பிரான்ஸ் மற்றும் பாரதி விளையாட்டுக்கழகம் – பிரான்ஸ் இணைந்து நடாத்தும் நாவலர் விருதுக்கான குறும்படப் போட்டி 2016 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது .ஈழத்தில் வசிப்பவர்கள் அனுமதிப்பணமாக 50 யூரோ செலுத்த வேண்டியதில்லை. பணப்பரிசுகளை பெற்றால் மட்டும் 50 யூரோ செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் போட்டியானது ஈழத்து கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன் ,எமக்கான திரைத்துறையை வளர்ப்பதே முக்கிய நோக்கமாக கொண்டது என்று கூறப்பட்டுள்ளது
மேலும் ஈழத்தவர் சினிமாவை முன்னுக்கு கொண்டு வரவும் தமிழரது சுயநிர்ணயப்போராட்டத்தின் நியாயத்தையும் தியாகங்களையும் இனப்படுகொலையையும் அதனூடு பேசவும் களமமைக்கும் வண்ணம்  இப்போட்டி நடாத்தப்படுகிறது என்று ஏற்பாட்டாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

போட்டிக்கான விதிமுறைகள்
தமிழ்த்தேசிய பண்புகளை மீறாதிருத்தல் வேண்டும்
23 நிமிடங்களுக்கு மேற்படக்கூடாது
ஏற்கனேவே இணையத்திலோ விழாக்களிலோ வெளியிடப்படாதிருத்தல் வேண்டும்
உபதலைப்புக்கள் (Subtitle) ஆங்கில மொழியிலும் இருத்தல் வேண்டும்

விண்ணப்ப முடிவுத்திகதி 25.4 .2016

தொடர்புகளுக்கு

0033614086355
0033635307671
0033629276499
0033651873146

மேலதிக தகவல்களை vskugan5@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு பெறமுடியும்.

12962460_10206010317438119_309736571_o

Related Posts