நாவற்குழியில் அமைந்துள்ள அரச காணியில் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்களுக்கு அந்தக் காணிகளை உரித்தாக்கும் முயற்சி நேற்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று அதை தடுத்து நிறுத்த முயன்ற சிறீதரன் எம்.பிக்கும் அத்துமீறிக் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
இது தங்களுக்கு சொந்தமான இடம் எனவும் அந்த இடத்தில் இருந்து தாம் ஒருபோதும் வெளியேறிச் செல்லப் போவதில்லை எனவும் அங்கு குடியேற்றப்பட்டுள்ள சிங்கள்வர்கள் கடும் தொனியில் சிறீதரன் எம்.பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எம்மை விரட்ட முயன்றால் மீண்டும் நாம் மோதுவதற்குத் தயாராகவே உள்ளோம். ஒருபோதும் இங்கு நிரந்தரமாக குடியேறும் முயற்சியில் இருந்து பின்வாங்க மாட்டோம் எனவும் எனவும் அவர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.
போருக்குப் பின்னர் தென்பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்ட 136 குடும்பங்களைச் சேர்ந்த நாவற்குழியில் அடாத்தாக குடியேற்ற்ப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள இந்தக் காணிகளை சிங்களவர்களுக்கே நிரந்தரமாக்கி வீட்டுத் திட்டங்களை வழங்குவத்ற்காக முயற்சிகள் அரசு மற்றும் படையினரின் முழுமையான ஆசியுடன் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று படையினரின் பிரசன்னத்துடன் அங்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள்இ காணிகளை அளந்து பங்கீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்து அங்கு விரைந்த சிறீதரன் எம்.பி. இம் முயற்சியை தடுத்து நிறுத்தினார். சிறீதரன் எம்;.பியுடன் சம்பவ இடத்திற்கு வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இதனையடுத்தே சிறீதரன் எம்.பியுடன் சிங்கள மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தக் காணி தமக்கு சொந்தமானதெனவும, அங்கிருந்து தாம் ஒருபோதும் வெளியேற மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்