நாளை ஹர்த்தால் இல்லை!

முல்லைத்தீவு பிலவுக்குடியிருப்பு மக்களின் 30 நாள் தொடர் போராட்டத்தை அடுத்து, அந்த மக்களின் நிலங்களை விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாத பட்சத்தில் வடக்குக் கிழக்கு தழுவிய ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கூடிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் ஜனாதிபதி உறுதி அளித்ததின்படி பிலவுக்குடியிருப்பு மக்களின் நிலங்கள் கையளிக்கபபட்டதன் காரணமாக நாளை 8ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த வடக்குக் கிழக்குத் தழுவிய ஹர்த்தால் இடம்பெற மாட்டாது என தமிழ் மக்கள் பேரவை வட டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை சொந்த நிலங்களை மீட்பதற்கான போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் தமிழ் மக்கள் பேரவை மீண்டும் பொது மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் எனவும் பேரவைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts