நாளை வெளியாகும் ‘பாகுபலி-2’ டிரைலர் பற்றிய சில தகவல்கள்

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாகுபலி-2’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த டிரைலர் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

‘பாகுபலி-2’ டிரைலர் 2 நிமிடம் 20 வினாடிகள் ஓடக்கூடியதாக தயாராகியுள்ளதாம். இந்த டிரைலரில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும்படியும் அமைக்கப்பட்டுள்ளதாம். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகளில் அற்புதமான சிலவையும் இந்த டிரைலரில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த டிரைலருக்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இந்த டிரைலரை நாளை காலை 9 மணிக்கு திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர். தெலுங்கில்தான் இப்படத்தின் முதல் டிரைலர் வெளியிடப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 250 முதல் 300 திரையரங்குகளில் இந்த டிரைலரை ஒளிபரப்பப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், நாளை மாலை 5 மணிக்கு இணையதளங்களில் இந்த டிரைலர் வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Related Posts