ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய உயர் திருவிழா நாளைய 17.06.2015 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது.
29.06.2015 திங்கட்கிழமை சப்பறம்
30.06.2015 செவ்வாய்க்கிழமை தேர் திருவிழா
01.07.2015 புதன்கிழமை தீா்த்தத் திருவிழா
02.07.2015 வியாழக்கிழமை கொடி இறக்கம் மற்றும் தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெறுகின்றது.
திருவிழாக் காலங்களில் தினமும் மாலை கோவில் முன் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அமுத சுரபி அன்னதான சபையினர் வழமைபோல உற்சவ காலத்தில் இவ்வாண்டும் அம்பாள் அடியார்கள் அனைவருக்கும் சிறப்பாக அன்னதானப் பணியினைச் செய்ய ஒழுங்குகள் மேற்கொள்வதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன் அடியார்களுக்காக விசேட போக்குவரத்து சேவையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மன் பெயரால் ஏமாற்றும் பேர்வழிகள் எவரிடமும் எப்பொருளையும் வழங்க வேண்டாம் என அம்பிகை அடியார்களை ஆலய அறங்காவலர் சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.