நாளை முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் !!

நாளை முதல் நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் 3,700 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது.

அத்துடன் நாளைய தினமும் கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக சமையல் எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நேற்றைய தினம் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

பகிர்ந்தளிப்பதற்கு போதிய டீசல் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை கனியவள தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.

Related Posts