நாளை முதலமைச்சர் கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களை தம்வசம் எடுத்துக்கொள்கிறார்.

முதலமைச்சர் அமைச்சுப்பதவிகளை தியாகம் செய்யுமாறு  கேட்டுக்கொண்டதற்கிணங்க  தமது இராஜினாமா கடிதங்களை விவசாய, மற்றும் கல்வி அமைச்சர்கள் ஒப்படைத்துள்ள நிலையில் நாளை (21) முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அந்த இருஅமைச்சுக்களையும் தம்வசம் எடுத்து ஆளுனர் முன் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார்.

குறித்த அமைச்சுக்கள் யாருக்கு வழங்கப்படும் என்பதில் ஊகங்கள் வெளிவந்தகொண்டிருந்த நிலையில் அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக முதலமைச்சர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

சபை அமைர்வு 22ம் திகதி நடைபெற உள்ள நிலையில் தனக்குரிய ஆதரவினை வலுப்படுத்திக்கொள்ளவும் அவைத்தலைவர் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு முடிவு காணும் போது  உறுப்பினர்களின் ஆதரவை தம்வசம் வைத்திருக்கவும் முதல்வர் விரும்புவதாக தெரியவருகின்றது.  ஆரம்பத்திலேயே அமைச்சுப்  பதவிகளுக்காக உறுப்பினர்கள்  முரண்பட்டால் உறுப்பினர்களின் ஆதரவு முதல்வர் சார்ந்த  முடிவுகளுக்கு இடையூறாக இருந்து விடும் என்பதால் அமைச்சர்கள் தெரிவை சிறிது காலத்திற்கு தள்ளிப்போட முதல்வர் முடிவு செய்துள்ளதாக அறியவருகின்றது.

Related Posts