நாளை மயிலிட்டியில் 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

daklausவலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் நாளை வியாழக்கிழமை 50 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என. டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மயிலிட்டி அக்காரயன் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 50 குடும்பங்கள் முதற்கட்டமாக நாளை வியாழக்கிழமை மீளகுடியேற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாளை காலை 8.30 மணிக்கு வலிகாமம் வடக்குப் பகுதிக்குச் சென்று மக்களை குறிடியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts