வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடளாவிய ரீதியில் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் விடுதி, புற்றுநோய் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியவசிய வைத்தியசாலைகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என, அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவின் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
இதன்படி, குறிப்பிட்ட வைத்தியசாலைகள் தவிர்த்து ஏனைய மருத்துவமனைகள் அனைத்திலும் நாளை காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை இவ்வாறு அடையாளப் பணிப் பகிஸ்கரிப்பு இடம்பெறும் என அவர் கூறியுள்ளார்.