நாளை கல்வியாளர்கள் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்- பாடசாலைகளை மூடுமாறும் அழைப்பு!!

இலங்கை கல்வித்துறையில் தகுதியற்ற ஆயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை 4 ஆம் திகதி புதன்கிழமை நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

வடமாகாணத்திலும் நடைபெறும் பணிப்புறக்கணிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி பாடசாலைகளை மூடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் கொழும்பு கல்வியமைச்சின் முன்னால் பெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.

அதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை மூலம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு – கல்வித்துறையில் ஏற்படவுள்ள ஆபத்தைத் தவிர்க்க சமூகப்பொறுப்புடன் செயற்படுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts