நாளைய போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் விபரம்

இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தினேஸ் சந்திமால் தலைமையிலான அணியில் உப்புல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்ஜலோ மெத்திவ்ஸ், லஹிரு திரிமான்னே, தனஞ்ஜய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தில்ருவன் பெரேரா, லஹிரு குமார, விஸ்வ பெர்ணாண்டோ, துஷ்மந்த சமீர, லஹிரு கமகே, லக்ஷான் சந்தகன் மற்றும் மலிந்த புஸ்பகுமார ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
காயம் காரணமாக இந்த போட்டியில் இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான போட்டி, நாளைய தினம் பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இலங்கையுடனான ஒருநாள் மற்றும் 20க்கு20 கிரிக்கட் தொடருக்கான இந்திய அணித் தெரிவு எதிர்வரும் 13ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணியில், ரவிச்சந்திரன் அஷ்வின், மொஹமட் சமி, மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Posts