தமிழர் தாயகமெங்கும் கையெழுத்து வேட்டை

மனித உரிமை சட்ட மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துவதாக, தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் தலைவர் வி.பி.சிவநாதன் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை யாழ். கந்தர்மடம் – மணற்றரை ஒழுங்கையில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் இது நம் தேசம் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

press--meet-kajentheran-1

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

நேற்று புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் பரிந்துரைக்கு அமைவாக, சர்வதேச விசாரணையினை வலியுறுத்தும் நோக்கத்துடன், யாழ். மாவட்டத்தில் கையொப்பம் பெறும் செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளதாக கூறினார்.

அந்த கையொப்பம் பெறும் செயற்பாட்டின் தொனிப்பொருளாக, “இலங்கைத் தீவில் நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்ட மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகளை சபையினை வலியுறுத்துகின்றோம்”.

11921780_511499412346407_7169178715453784282_o

இதேவேளை, இலங்கை அரசினால் உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளக பொறிமுறையினையும், விசாரணையையும், உறுதிபட நிராகரிக்கின்றோம் என்ற கோரிக்கையினை முன்வைத்து யாழ். நகரப் பகுதியில் கையெழுத்து பெறும் நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர்.

அதன் பிரகாரம், நாளை வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணியளவில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இந்த கையொப்பம் பெறும் செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கையொப்பம் பெறும் நடவடிக்கைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், ஊழியர் சங்க உறுப்பினர்கள் பலர் ஆதரவு வழங்கியுள்ளதுடன், தாயக ரீதியிலான போராட்டம் ஒன்றினையும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அந்த குழுவினர் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

press--meet-kajentheran-2

தொடர்புடைய செய்தி

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில்போராட்டங்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

Related Posts