நாளைமுதல் தனியார் பேரூந்துகளில் யாசகம் செய்வதற்கு தடை

chieldநாளைமுதல் பேரூந்துகளில் யாசகம் செய்வது மற்றும் பணம் பெறுவது முற்றாகத் தடைசெய்யப்படுமென தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண இதனை தெரிவித்துள்ளார்.

பயணிகளின் முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நாளை முதல் இவை நடைமுறைக்கு வருகின்றது. இதுதொடர்பில் எழுத்து மூலம், பாதுகாப்பு செயலாளர், தனியார் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts