மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
நாளாந்த மின்வெட்டு நேரம் மூன்று மணித்தியாலங்களை விடவும் விரைவில் அதிகரிக்கப்படலாம் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. நேற்றைய தினம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தை இடையறாது விநியோகம் செய்வதற்கு போதியளவு எரிபொருள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.
மக்கள் நினைப்பதனை விடவும் மின்வலு துறையில் பாரிய நெருக்கடி நிலைமைகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
எனவே மின்வெட்டு நேரம் மூன்று மணித்தியாலங்களை விடவும் நீடிக்கப்படும் சாத்தியங்கள் வெகு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ள முனைப்பு காட்டப்படுவதாகவும், மெய்யான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.