நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருகின்றது : எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கை மத்திய வங்கி அறிக்கை தொடர்பிலான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று ஆரம்பமானது.

பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உரையாற்றுகையில் ஒவ்வொரு அரசாங்கமும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தாலும், நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் இதனால், ஊழலை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தில் உள்ள சில உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டினால் பொதுமக்கள் அதிதிருப்தி அடைந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts