சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘நாய்கள் ஜாக்கிரதை’. இதில் சிபிராஜிற்கு ஜோடியாக அருந்ததி நடித்திருந்தார். மேலும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது. இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருந்தார். சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்திருந்தது.
கடத்தல் கும்பலிடமிருந்து தனது மனைவியை நாயின் உதவியுடன் சிபிராஜ் கண்டுபிடிப்பதை திரைக்கதையாக அமைத்திருந்தார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. வணிக ரீதியிலும் இப்படம் வெற்றி பெற்று வருகிறது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருக்கிறார்கள். இப்படத்தையும் சக்தி சௌந்தர்ராஜன் இயக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு இறுதியில் இப்படத்திற்கான வேலையை தொடங்க இருக்கின்றனர்.
இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.