நாய்களை ஏவிவிட்டு மக்களைக் கலைக்கும் இராணுவம்!

இன்று 18ஆவது நாளாக தமது நிலத்தை மீட்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கும் பிலவுக்குடியிருப்பு மக்களைத் துரத்துவதற்காக விமானப்படையினர் நாய்களை ஏவிவிடுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிலவுக் குடியிருப்பு மக்களின் சிறீலங்கா விமானப்படையினர் கடந்த எட்டு ஆண்டுகளாகக் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலையில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு குறித்த மக்கள் கடந்த 31ஆம் நாளிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மக்களை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களை அவ்விடத்தை விட்டுக் கலைக்கும் நடவடிக்கையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்நிலையில், இன்று தமது நாய்களை ஏவிவிட்டு மக்களைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எவ்வாறிருப்பினும் தாம் அவ்விடத்தைவிட்டு நகரமாட்டோம் என மக்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts