‘நாம் இன்று பயிரிடுவோம் நாளை பயன் பெறுவோம்’ தொனிப்பொருளுக்கு அமைய கருமங்களை ஆரம்பிக்கும் புத்தாண்டின் சுபவேளையில் நான்கு மில்லியன் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் – 2013 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் இன்று நடைபெற்றது. விவசாய ஆசிரியர் திரு.க.மகேந்திரன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந் நிகழ்வில் கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்கள் தலைமைதாங்கினார்.’பயன்மிக்க மரங்களை நடுவதன் மூலம் மாணவர்கள் பொருளாதாரப்பயன்களை பெறமுடியும் என்ற கருத்தினை அதிபர் மாணவர்களுக்கு எடுத்துரைத்ததுடன் மரக்கன்றுகளையும் வழங்கிவைத்தார். தொடர்ந்து கல்லூரியின் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோரும் கன்றுகளை வழங்கி வைத்ததுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
- Friday
- April 18th, 2025