நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் கடந்த 17ம் தேதி சீமான் தனது ஆதரவாளர்களுடன் மதுரைக்கு சென்றபோது சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் மோதலில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

seeman-arrest

சுங்கச் சாவடி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னையில் சீமானை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவரை மதுரைக்கு போலீசார் அழைத்து சென்றனர். கடந்த பலமுறை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைதான சீமான் இம்முறை சுங்கச் சாவடியில் மோதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே சீமானை கைது செய்வதற்கு சீமான் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை ஆலம்பாக்கத்தில் போலீசாருடன் சீமான் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Related Posts