நாமல் விசாரணைக்கு வராதன் காரணம் தெரியுமா?

அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிக்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை 09.30க்கு அவரை ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

எதுஎவ்வாறு இருப்பினும், தற்போது வரை நாமல் ராஜபக்ஷ, நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வரவில்லை என, அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இது குறித்து அத தெரண நாமலின் சட்டத்தரணியிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகயீனமடைந்துள்ளதாகவும், எனவே இன்று நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராக மாட்டார் என தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Related Posts