நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட கூடும் என தெரியவருகிறது.
நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதற்கு தேவையான சாட்சியங்கள் தேவைக்கு மேலதிகமாக தயாராக இருப்பதாகவும் இதனை அரசியல் பிரச்சினையாக காட்டி அரசியல் இலாபம் பெற மகிந்த தரப்பினருக்கு இடமளிக்காத வகையில் பொலிஸார் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது.
நாமல் ராஜபக்ஸ எந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட போகிறார், அவருக்கு எதிராக இருக்கும் சாட்சியங்கள் என்ன என அனைத்து தகவல்களும் தம்மிடம் இருப்பதாகவும் விசாரணைகளுக்கு தடையேற்படும் என்பதால், அவற்றை தற்போது வெளியிடப் போவதில்லை எனவும் சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.